உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்:
அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 2-ஆவது சுற்றில் தென் கொரியாவின் கிம் ஹியோ மின்னை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கும் முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.