இந்திய கிரிக்கெட் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட சீனியர் வீரர்கள் வங்கதேச தொடரில் களமிறங்குகின்றனர். இந்திய அணி தன் முழு பலத்துடனும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் மிகச்சிறந்த பார்மில் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் பார்மிற்கு திரும்பியுள்ளதால் அவரிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில் இந்திய தொடருக்கு கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரிலும் இக்பால் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. என்றாலும் கூட பந்துவீச்சில் முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் ஹூசைன் மிகப்பெரிய பொறுப்புகளை எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.