கலிபோர்னியா அலைச்சறுக்கு போட்டியின் லீக் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை வெற்றி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கண்டிங்டன் கடற்கரையில் வேன்ஸ் எனும் சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சீறிவரும் அலைகளுக்கு இடையே லாவமாக சறுக்கி சென்ற பிரான்ஸ் வீராங்கனை ஜோகன்னே டிஃவே அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.