Skip to main content

மெஸ்ஸி சாதனையை சமன்செய்த சுனில் ஷேத்ரி! - இந்திய அணி சாம்பியன்..

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களே எங்களை விமர்சியுங்கள், திட்டுங்கள் ஆனால் புறக்கணிக்காதீர்கள் என்ற இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரியின் வேண்டுகோளை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். தங்களை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு சொன்னதைச் செய்து காட்டியிருக்கிறார்கள் இந்திய கால்பந்தாட்ட அணி வீரர்கள். 
 

sunil

 

இந்தியா, கென்யா, நியூசிலாந்து மற்றும் சீனா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த கால்பந்தாட்டத் தொடரில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. நேற்று மும்பையில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 8 மற்றும் 29ஆவது நிமிடங்களில் இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் 64 கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை, உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியுடன் சுனில் ஷேத்ரி பகிர்ந்துகொள்கிறார். 81 கோல்களுடன் ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார். 
 

indian

 

நேற்றைய போட்டியில் இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது. தொடர் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நியூசிலாந்து உடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு மற்றும் நாட்டின் மீது நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து எங்களுக்கு இதேபோல் ஆதரவு தாருங்கள் என சுனில் ஷேத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.