
ரிஷப் பண்ட் காயம் குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.
13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 27-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. போட்டியின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
"ரிஷப் பண்ட் ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார். அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்ற உறுதியான தகவல் இல்லை. அவர் வலிமையாக மீண்டு வருவார் என்று நம்புகிறேன்" என மும்பை அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் பேசினார்.