ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரருமான ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டது குறித்து அவர் விளக்கமும், மன்னிப்பும் கோரியுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டன. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வாட்சன் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்த பின்னர், ஹேக்கர்கள் சில சட்டவிரோத படங்களை வெளியிட்டதாகவும், அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்கு அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். முதலில் எனது ட்விட்டர் கணக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டு இப்போது இன்ஸ்டாகிராம். இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும்" என தெரிவித்துள்ளார்.