Skip to main content

வெடித்தது சர்ச்சை... கன்னடத்தில் பாடலை வெளியிட்டு சமாதானப்படுத்திய ஆர்.சி.பி!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

rcb

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்ட பாடலில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. அனைத்து அணி வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கில், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அணி நிர்வாகங்கள் தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியில் உள்ளனர். அந்த வகையில் பெங்களூர் அணி நிர்வாகம் செய்த ஒரு செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெங்களூர் அணி நிர்வாகம், பெங்களூர் அணிக்கான பாடல் ஒன்றை வெளியிட்டது. அதில், இடம்பெற்றுள்ள வரிகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்தித் திணிப்புக்கு எதிராகக் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், பெங்களூர் அணி நிர்வாகம் செய்த இச்செயல், கன்னட உணர்வாளர்களையும், அம்மாநில கிரிக்கெட் ரசிகர்களையும் கொதித்தெழச் செய்துள்ளது .

 

இதற்கு, எதிர்ப்புகள் வலுத்த நிலையில் பெங்களூர் அணி நிர்வாகம் உடனே சுதாரித்து, தற்போது கன்னட மொழியில் புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளது. பெங்களூர் அணி தன்னுடைய முதல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் வரும் 21- ஆம் தேதி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.