Skip to main content

இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்... வரலாறு படைத்தார் பி.வி.சிந்து!

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

 India's second medal ... PV Sindhu made history!

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை  21-13, 21-15 என்ற கேம் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இதன்மூலம் பி.வி.சிந்து படைத்துள்ளார்.

 

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால் பி.வி சிந்து ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இன்று வெண்கலம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது.

 

வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'தனது மகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என சிந்துவின் தாயார் விஜயா தெரிவித்துள்ளார். அதேபோல் சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், 'எனது மகளுக்கு பிரதமர் மோடி ஊக்கமளித்தது உற்சாகப்படுத்தினார்' என தெரிவித்துள்ளார்.