நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், ஷமி, சைனி, இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதில் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.