நேற்று உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வீரர் ஜடேஜா அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் நேற்று அவரது தந்தையும், சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் ஜடேஜாவின் சகோதரியும், தந்தையும் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன்பே கடந்த மாதம் ஜடேஜாவின் மனைவி பாஜக வில் இணைந்தார். கட்சியில் இணைந்ததோடு தேர்தலுக்காக பாஜக -விற்கு கட்சி பணியும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவரது தந்தையும், சகோதரியும் காங்கிரஸில் இணைந்தவுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் இரண்டு முக்கிய கட்சிகளிலும் சேர்ந்துவிட்டனர் என கூறி இணையத்தில் ஜடேஜாவை கலாய்த்து மீம்ஸ்கள் போடப்பட்டன.
இதனை தொடர்ந்து ஜடேஜா பாஜக வுக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதனை பாராட்டி பிரதமர் மோடி ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், "நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.