Skip to main content

கோலி ஓய்வு; நியூஸிலாந்து எதிரான தொடரில் முடிவு...

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

hgf nchgf n

 

இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக  5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. நேற்று நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணித்தேர்வுக்குழு நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்த வரும் டி20 தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் விராட் கோலியின் பணிச்சுமையை குறைப்பதற்காக, அவருக்கு கடைசி இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மற்றும்  டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலிக்கு மாற்று வீரர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்குப் பின் பிப்ரவரி 24 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் கோலி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

விராட் கோலியின் சாதனை; 5 வருடங்களுக்கு முன்பே கணித்த மறைந்த ரசிகர்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

கிரிக்கெட் கடவுள், ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார், அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் அடித்து அசைக்கமுடியாத மைல் கல் ஒன்றை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தியிருந்தார். இதனை கடந்த (15.11.2023) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சச்சின் அடித்த அந்த 49வது சதத்தை விராட் கோலி முறியடித்து உலக சாதனை படைத்தார்  

 

இந்த சாதனையை தொடர்ந்து  நியூசிலாந்து அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி; இதனை கொண்டாடும் விதமாக சமூக வலைத்தளங்களில் விராட் கோலியை புகழ்ந்து பதிவிட்டு வந்தனர், இதில் 12 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட  பேஸ்புக்  பதிவு ஒன்று வைரலாகி உள்ளது 

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

2012ஆம் ஆண்டு பதிவிட்ட அந்த பழைய பேஸ்புக் பதிவு கேரளாவைச் சேர்ந்த விராட் கோலியின் தீவிர ரசிகரான சிஜூ பாலநந்தனின் பதிவு; அப்பதிவில் அவர் கூறியிருப்பது,  “விராட் கோலி ஒரு நாள், சச்சின்  டெண்டுல்கரின் 49 சதங்களை முறியடிப்பார்” என்றும், தொடர்ந்து விராட் கோலியின் 35வது சதம் வரை அந்த பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்த சிஜூ பாலநந்தன் கார் விபத்தில் காலமானார்; இதன் பிறகு அவரின் நண்பர்கள்  விராட் கோலி அடித்த அடுத்தடுத்த சதத்தை இறந்த நண்பனின் பேஸ் புக் பதிவின் கீழ் அப்டேட் செய்து வந்துள்ளனர்.

 

Virat Kohli's record; Fan who predicted 5 years ago!

 

அரையிறுதி ஆட்டத்தில் சிஜூ பாலநந்தன் சொன்னது போல் விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடித்த நிலையில், சிஜூவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உயிரோடு அவர் இல்லை என்றாலும், அவரின் அந்த வார்த்தைகள் இன்றளவும் உயிர் வாழ்வதாக அவரது நண்பர்களும் நெட்டிசன்களும் உருக்கம் தெரிவிக்கின்றனர்.

- காலேப் கீர்த்தி தாஸ்

 

 

Next Story

விராட் கோலி சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Sachin excited about Virat Kohli's feat

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

 

இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ரோல் மாடலும், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின், விராட் கோலியைப் பாராட்டியுள்ளார்.  தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தளத்தில் "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ சிறந்த வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

Sachin excited about Virat Kohli's feat

 

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட என்க்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ததும், மேலும் எனது சொந்த மைதானத்தில் இது நடந்தது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது”என பதிவிட்டுள்ளார்.