இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால் நேற்றைய போட்டி வரை சேர்த்து தென் ஆப்பிரிக்கா மொத்தமாக இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அந்நாட்டு வீரர் டுமினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமுடன் பேசியுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தொடர் தோல்வி குறித்து பேசிய அவர், "இந்த உலகக்கோப்பை தொடரில் நாங்கள் மோசமாக செயல்பட்டிருக்கிறோம். இந்த தோல்விக்கு எங்கள் நாட்டு ரசிகர்களிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உலக அரங்கில் ஒரு நாட்டின் பிரதிநிதியாக விளையாடுவதற்கு பெருமைக்குரிய விஷயம். கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக விளையாட வந்து இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்ததித்து நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டோம்.
தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். அனைத்து போட்டிகளிலும் ஆதரவு அளித்த மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள்!” என்று மனம் உருக பேசியுள்ளார் டுமினி. அவற்றின் இந்த பேச்சுக்கு பல ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணியில் விளையாடி வரும் டுமினி, இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது கடைசி உலகக்கோப்பை தொடரில் அந்த அணி இப்படி விளையாடியதற்கு அந்நாட்டு ரசிகர்களே அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.