தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஜீன் பால் டுமினி, நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
2004-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் அறிமுகமான டுமினி, இதுவரை 46 டெஸ்ட் போட்டி, 193 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 48
டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள டுமினி 2013 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 166, சராசரி 32.85, சதம் 6, அரை சதம் 8 மற்றும் 42 விக்கெட்களை எடுத்துள்ளார். டுமினி கடந்த 2017-ம் ஆண்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகப்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அவர் அறிவித்துள்ளார்.
இதுவரை 193 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டுமினி 5,047 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 150*, சராசரி 37.38, சதம் 4, அரை சதம் 27 மற்றும் 68 விக்கெட்களை எடுத்துள்ளார். அதேபோல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.