Skip to main content

வான்கடே எங்க கோட்டை... வந்து பார்! மிரட்டும் மும்பை - ஐ.பி.எல். போட்டி #37

Published on 06/05/2018 | Edited on 07/05/2018

இந்த சீசனின் 37ஆவது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டி, மாலை நான்கு தொடங்குகிறது. 

Mumbai

 

ஐ.பி.எல். 11 சீசன் தொடங்கியதில் இருந்து 9 போட்டிகளில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று மோசமான நிலையில் இருக்கிறது. இனி மீதமிருக்கும் ஐந்து போட்டிகளில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், மும்பை அணி 2015ஆம் ஆண்டு நடந்த அந்த மிராக்கிளை மீண்டும் நிறைவேற்றும் வாய்ப்பும் இருக்கிறது.

 

kkr

 

கொல்கத்தா அணி பேட்டிங்கில் அசத்தலாக இருந்தாலும், பவுலிங்கில் இன்னமும் சொதப்பலாகவே நீடிக்கிறது. அனுபவமிக்கவராக இருந்தாலும், மிட்செல் ஜான்சன் அதிக ரன்களைக் கொடுப்பதால் இன்றைய போட்டியில் டாம் குர்ரன் களமிறக்கப்படலாம். மும்பை அணியில் பென் கட்டிங்கிற்கு பதிலாக முஷ்தபிஜூர் இறங்கலாம்.

 

இந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதியுள்ள 21 போட்டிகளில் மும்பை அணி 16 போட்டிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேபோல், மும்பை வான்கடே மைதானத்தில் களமிறங்கிய 7 போட்டிகளில் ஆறில் மும்பை அணியே வெற்றிபெற்றிருக்கிறது. 

 

mumbai

 

எனவே, வான்கடே எங்கள் கோட்டை என மும்பை அணி மிரட்டலாக காத்திருக்கலாம். ஆனால், இந்த சீசனில் அந்த அணி மும்பை மைதானத்தில் நடந்த மூன்று போட்டிகளில் பெங்களூரு அணியுடன் மட்டுமே ஜெயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.