![IPL: Kolkata Knight Riders beat Chennai!](http://image.nakkheeran.in/cdn/farfuture/M7enjBEA19svrtlH2bfb_Y3skhnOPOiA-k_TCeH1dCc/1648318264/sites/default/files/inline-images/kkr4343434.jpg)
15 ஆவது ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் 11 ஓவர்களில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தவித்த நிலையில், தோனி தனது அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தோனி 38 பந்துகளில் 50 ரன்களுடனும், ஜடேஜா 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
![IPL: Kolkata Knight Riders beat Chennai!](http://image.nakkheeran.in/cdn/farfuture/EF7XM25ZXSHU3OrlM4nJuT1kAv_k_DX0g2Qrt-2w0vY/1648318273/sites/default/files/inline-images/dhono43434.jpg)
அதைத் தொடர்ந்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.