மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றுவது டி20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்றதால், 3-0 என்று மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடியக மேற்கிந்தி தீவுகள் அணியின் வீரார்கள் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரனக்ளை எடுத்தது. இதனையடுத்து 182 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, பின்னர், சிஹர் தவானும், கே.எல். ராஹுலும் ஜோடி சேர்ந்தனர். ஷிஹர் தவான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கே.எல் ராஹுலும் பார்ட்னர்ஷிப் இல்லாமல் விரைவில் வெளியேற,களத்திற்கு ரிஷப் பண்ட் வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி பந்து வரை சென்றாலும் இந்திய அணி இந்த இலக்கை எளிதாக எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய தவான் 92 ரன்களையும், பண்ட் 58 ரன்களையும் விளாசினர். ஷிகர் தவானுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.