ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 83 (66), தோனி 79 (88), ஜாதவ் 40 (54) ரன்களை எடுத்தனர்.
அடுத்து ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸை தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இருமுறை பாதிக்கப்பட்டது. இறுதியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து இந்திய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்றது.