Skip to main content

ஒமிக்ரான் பரவல்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இருபது ஓவர் தொடர் ஒத்திவைப்பு!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

jai shah

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடிவரும் இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ஒமிக்ரான் வகை கரோனா பரவிவருவதால், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

 

அதேநேரத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் திட்டமிட்ட தேதியிலிருந்து ஒருவாரத்திற்குத் தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியானது. இந்தநிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “இந்தியா, தென்னாப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும்” என தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் இரு அணிகளுக்குமிடையே நடைபெற இருந்த இருபது ஓவர் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இருபது ஓவர் தொடர் மட்டும் வேறு தேதியில் நடைபெறும் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இருபது ஓவர் தொடர் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.