Skip to main content

இந்தியா vs இங்கிலாந்து! - நான்காவது டெஸ்டில் டாஸ் எந்தளவுக்கு முக்கியம்?

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
indian

 

 

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. சவுத்தாம்டனில் வைத்து நடைபெற இருக்கும் இந்தப் போட்டிதான், தொடரில் இந்தியா நீடிக்குமா அல்லது இங்கிலாந்து தொடரை வெல்லுமா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது. 
 

ஆனால், இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதை டாஸ்தான் தீர்மானிக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். ஆம், நடந்து முடிந்த போட்டிகளில் டாஸ் யாருக்குக் கிடைக்கும் என்பதைப் பொறுத்தே, போட்டியின் முடிவும் இருந்திருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸை வென்றது. ஒருவேளை அந்த அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தால், இந்திய அணியைப் போலவே விக்கெட்டுகள் சீட்டுக்கட்டைப் போல் சரிந்திருக்கும். அதேபோல், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, மீண்டும் பவுலிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் இந்த பிட்சில், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது மிகப்பெரிய பிழை என்றே பலரும் விமர்சித்தனர். 
 

 

 

இந்நிலையில், சவுத்தாம்டனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில், போட்டியின் தன்மையை டாஸ் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் இதே மைதானத்தில் ஹேம்ப்ஷிர் மற்றும் நாட்டிங்காம்ஷிர் அணிகளுக்கு இடையிலான போட்டி சில விஷயங்களை உணர்த்துகின்றன. அதன்படி, டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யவேண்டும். நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் சுழற்பந்துக்கு ஏதுவானபடி பிட்சின் தன்மை மாறும். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி காத்திருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.