Published on 15/11/2019 | Edited on 15/11/2019
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த தோனி தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடரிலும் அவரது பெயர் பரிசீலிக்கப்படவி்ல்லை. இந்த சூழலில் தோனி ராஞ்சியில் இன்று வலைபயிற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் விளையாட உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையும், உற்சகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.