ஆசிய கோப்பை போட்டியில் முதல் கட்ட லீக் சுற்று முடிவடைந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4லீக் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்று தொடங்கும் இந்த சூப்பர் லீக் சுற்றில், துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும், அபுதாபியில் நடக்கும் போட்டியில் பகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றது.
இந்நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்திக் பட்டேல், அக்சர் பட்டேல், சர்துல் தாகூர் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று நடக்க இருக்கும் போட்டியில், இந்திய வேகப்பது வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு ஒய்வளிக்கப்பட்டு ஜடேஜா அல்லது தீபக் சஹார் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. வங்கதேச அணிக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம் தொல்வியடைந்திருந்தாலும், அதை தவறாக மதிப்பிட முடியாது.
அதேபோல, அபுதாபியில் நடக்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வதில், ஆப்கானிஸ்தானை குறைவாக எடை போட்டுவிட முடியாது. இலங்கை, வங்கதேசம் என்னும் இரண்டு அணிகளையும் தொல்வியடைய செய்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்கின்ற இரண்டு போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.