Published on 17/10/2020 | Edited on 17/10/2020

இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்தீவ் ஷாவை 'இளம் சேவாக்' என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ப்ரித்தீவ் ஷா, ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் களமிறங்கிய ப்ரித்தீவ் ஷா, 25.25 சதவிகித ரன் விகிதத்துடன் 202 ரன்கள் குவித்துள்ளார். தனது அபார ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் ப்ரித்தீவ் ஷாவை, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அதில் அவர், "ப்ரித்தீவ் ஷா பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் இளம் சேவாக். இந்திய அணியில் எனக்குப் பிடித்த வீரர் என்றால் சேவாக்தான். அவரது விளையாட்டை இவரிடம் பார்க்கிறேன்" எனக் கூறினார்.