Skip to main content

"இது போட்டி விதிகளுக்கு உட்பட்டதுதான்" இயான் சேப்பல் கருத்துக்குப் பதிலளித்த மேக்ஸ்வெல்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Glenn Maxwell

 

‘ஸ்விட்ச் ஹிட்' வகை ஷாட்கள் விளையாடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கூறிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் கருத்திற்கு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பதிலளித்துள்ளார்.

 

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த இயான் சேப்பல் மேக்ஸ்வெல் விளையாடுகிற ஸ்விட்ச் ஹிட் வகை ஷாட்கள் தவறானது என்றும், அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது எனவும் கூறினார். மேலும், பேசிய அவர் இந்த வகை ஷாட்கள் விளையாடினால், அதை விதிகளுக்குப் புறம்பானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

 

இந்நிலையில், இது குறித்து மேக்ஸ்வெல்லிடம் கேள்வியெழுப்பிய போது, "இது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதுதான். கிரிக்கெட்டில் பேட்டிங் ஒவ்வொரு காலமும் மாறி வருகிறது. அதனால்தான் பெரிய ரன்கள் குவிக்கப்படுவதையும், அது சேஸிங் செய்யப்படுவதையும் நாம் பார்க்கிறோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் திறமையை ஒவ்வொரு நாளும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு முறையும் மாறியுள்ளது. எனவே ஸ்விட்ச் ஹிட் வகை ஷாட்களை கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன்" எனக் கூறினார்.