Skip to main content

"நம்பவைத்து முதுகில் குத்திவிட்டீர்கள்" - சக வீரரை கடுமையாகச் சாடிய கெய்ல்...

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

gayle criticize sarwan

 

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், சக மேற்கிந்திய வீரர் ராம்நரேஷ் சர்வானை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கரிபீயன் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்த கெய்ல், அண்மையில் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார். திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டதால், இதுகுறித்து விளக்கம் கேட்க அவர் பலமுறை அந்த அணியில் பயிற்சியாளரும், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரருமான சர்வானை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்புகளை ஏற்காத சூழலில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கெய்ல்.

அதில், "நீங்கள் கரோனா வைரஸை விட மோசமானவர். ஜமைக்கா அணியிலிருந்து என்னை கழற்றி விட்டதில் உங்கள் பங்கு மிகப்பெரியது என்பதை நான் அறிவேன். அணியின் உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சர்வான் முயல்கிறார். பாம்பு போல என்னை பழிவாங்கிவிட்டீர்கள். நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டீர்கள். 1996-ம் ஆண்டு கிரிக்கெட் களத்தில் நுழைந்து இன்னும் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் நான்தான். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். அந்த தசாப்தத்தில் கடைசி வீரராக எஞ்சி நிற்கிறேன். இன்னும் களத்தில் வலுவான வீரராக உள்ளேன். தொடர்ந்து வெற்றியாளராக வலம் வருவேன்" என தெரிவித்துள்ளார். ஜமைக்கா அணியிலிருந்து நீக்கப்பட்ட கெய்ல் தற்போது டேரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியில் இணைந்துள்ளார்.