இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதியின் எம்.பி யான கவுதம் கம்பிர் ட்விட்டரில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை சமீப காலத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிக்க நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இக்குழுவின் உறுப்பினரான கவுதம் கம்பிர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு மாசு தொடர்பான கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கம்பிர் இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை கடுமையான விமர்சிக்கும் இணையவாசிகள், "கடந்த வாரத்தில் மாசு குறித்தும், அதற்காக அரவிந்த் கேஜ்ரிவால் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்த கம்பிர், இன்று கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என விமர்சித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.