Skip to main content

கடந்த மூன்று ஆண்டுகளில் அசைக்கமுடியாத கிரிக்கெட் அணி!

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
கடந்த மூன்று ஆண்டுகளில் அசைக்கமுடியாத கிரிக்கெட் அணி! 

இளம் மற்றும் அனுபவம் நிறைந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி, கடந்த மூன்று ஆண்டுகளில் தனித்துவமான நிலையை அடைந்துள்ளது. ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர்கள், வேகம் மற்றும் சுழலில் முன்னேற்றம் என பல மாற்றங்களை ஏற்படுத்தி அது முன்னேறிக் கொண்டிருக்கிறது.



கடந்த மூன்று ஆண்டுகளில் உலக நாடுகளில் மற்ற கிரிக்கெட் அணிகளால் அசைக்கமுடியாத அணியாக இந்திய அணி இருந்துள்ளது. அதாவது ஜனவரி 1, 2015 முதல் ஜனவரி 1, 2018 வரையிலான இந்தக் காலகட்டத்தில் இந்திய அணி அடைந்துள்ள வெற்றிக்கணக்கு மிகப்பெரியது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதி, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதி, 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி என முன்னேறிச் சென்றிருந்தாலும் கோப்பையைக் கைப்பற்றத் தவறியது ஏமாற்றத்தை அளித்தது. மொத்தம் 1,096 நாட்கள் கொண்ட இந்தக் காலகட்டத்தில் இந்திய அணி அனைத்து ஃபார்மேட்டுகளிலும் சேர்த்து 135 போட்டிகளில் விளையாடியுள்ளது. 87 வெற்றி, 36 தோல்வி, 9 டிரா மற்றும் மூன்று முடிவு தெரியாத ஆட்டங்கள் இதில் அடக்கம். இந்திய அணியின் வெற்றி சதவீதம் 64.44.

அதேசமயம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் மட்டுமே எதிரணிகளுடன் களம் கண்டுள்ளது. அதில் ஒரு தொடரில் கூட இந்திய அணி தோற்கவில்லை என்றாலும், குறிப்பிட்ட சில போட்டிகளில் மிக மோசமான தோல்விகளை அது தழுவியுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், வேகப்பந்துகளை சந்திக்க முடியாமல் இந்திய அணி திணறியது நினைவுகூரத்தக்கது.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அயல்நாட்டு மண்ணில் சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணி, அங்கும் இதே சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

சார்ந்த செய்திகள்