வெறும் இரண்டு வயதிலேயே கவர் டிரைவ் ஷாட்களை நேர்த்தியாக அடிக்கும் குழந்தையை ஐசிசி பாராட்டியுள்ளது.
ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேன் ஆஃப் தி வீக் விருதுக்கான வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த அலி என்னும் இரண்டு வயது ஆண்குழந்தை, அவனது அப்பாவின் வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் ஷாட்களை அடிக்கிறான். நன்கு பழகிய கிரிக்கெட் வீரனைப் போன்ற அவனது ஷாட்கள் பலராலும் பாராட்டிகளைப் பெற்றதோடு, அந்த வீடியோ காட்சி பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை முதலில் பகிர்ந்த ஐசிசி, இவனுக்கு வயது வெறும் இரண்டுதான். ஆனால், ஆஃப்-சைடில் இவனது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கிறது. ஒரு போஸ் கொடு அலி.. ஐசிசி-யின் இந்த வார ‘ஃபேன் ஆஃப் தி வீக்’ நீதான். இதேபோல் உன் அப்பாவிடம் பயிற்சிபெற்றால், ஒருநாள் நிச்சயமாக வங்காளதேசம் அணிக்காக நீ விளையாடுவாய்’ என அதில் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை சிறுவயதிலேயே கலக்குவதில் அலி மட்டுமல்ல.. சமீபத்தில் பத்து வயதுமிக்க சிறுவன் இடதுகை வேகப்பந்து வீச்சில் உலகை அதிரவைத்தான். இந்த வீடியோவைக் கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆர்வத்துடன் அவனுக்கு பயிற்சி தர முன்வந்தது குறிப்பிடத்தக்கது.