சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
நேற்று இங்கிலாந்து, நாட்டிங்காமில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் எடுத்து உலகசாதனை படைத்துள்ளது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியானா ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐம்பது ஓவர் இறுதியில் 6 விக்கெட்டுக்கு 481 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோனி பாஸ்ட்ரோ 139 ரன்களும், அலெக்ஸ் 147 ரன்களும் சேர்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 239 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதற்கு முன்பு 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 481 ரன்கள் எடுத்து தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து.