14வது தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர் வாள்வீசும் போட்டிகள் ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வர் நகரில் 25.02.2022 முதல் 27.02.2022 வரை நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து, சுமார் 18 மாநிலங்களில் இருந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் 16 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட இருபத்தி ஏழு நபர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு மேலாளராக தாமோதரன், பயிற்சியாளராக பார்த்திபன், கேப்டன் சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
தனிநபர் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் சார்பாக பாயில் பிரிவில் புனிதா, வெங்கல பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான தனிநபர் எப்பி பிரிவில் சிராந்தி, வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
ஆண்களுக்கான குழு போட்டியில், பாயில் பிரிவில் ஜோசப் சுரேஷ், நூருதீன், கோகுல, கண்ணன், சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழு வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. அதேபோல், பெண்களுக்கான குழு போட்டியில் எப்பி பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்று வந்துள்ளனர். இப்போட்டியில் சிராந்தி, லதா, பானுப்பிரியா, சங்கீதா ஆகியோர் இருந்தனர். இப்போட்டியில் தமிழக அணி கலந்து கொள்வதற்கு வீல்சேர் பென்ஸிங் பெடரேஷன் செயலாளர் வெங்கடேசன் உதவி புரிந்துள்ளார்.