தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் மூளையாக செயல்பட்டவர் டேவிட் வார்னர். இதனால், அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஐ.பி.எல். ஒப்பந்தங்கள் என பலவும் அவர் கைகளில் இருந்து பறிக்கப்பட்டன.
உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ள இந்த செயலுக்கு தாம் வருந்துவதாகவும், தம்மை மன்னிக்கவேண்டும் எனவும் வார்னர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளைச் சந்தித்த பின்னர், தற்போது மவுனம் உடைத்த டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாங்கள் செய்த தவறு கிரிக்கெட் விளையாட்டையே சேதப்படுத்திவிட்டது. இந்தத் தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் மற்றும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதனால், ரசிகர்கள் மற்றும் இந்த விளையாட்டுக்கு மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்திவிட்டோம் என்பதை உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே நேசித்த ஒரு விளையாட்டின்மீது கறை ஏற்படுத்திவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இந்தக் காலத்தில் என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பத்தகுந்த ஆலோசகர்களோடு நேரம் கழிக்கப்போகிறேன். கூடியவிரைவில் உங்கள் முன் பேசுவேன்’ எனவும் அதிக் பதிவிட்டுள்ளார்.