உலக அளவில் புகழ்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் அணிகள், தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ட்விட்டர் நிறுவனம், ஐ.பி.எல் அணிகளின் பெயரையோ, அவர்களது டேக்லைனையோ (tagline) ஹாஸ்டாக்காக (hashtag) பயன்படுத்தினால், அந்த அணிகளின் ஜெர்சி எமோஜி வரும் வகையில் செய்திருந்தது.
இந்தநிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டேக்லைனான #ப்ளேபோல்ட் (playbold) என்பதைக் குறிப்பிட்டால், சென்னை அணியின் ஜெர்சி வந்தது. இதனை ட்விட்டர் ரசிகர்கள் கிண்டல் செய்யத்தொடங்க, சி.எஸ்.கே அணியும் டெம்ப்ளேட் போட்டு கிண்டல் செய்துள்ளது.
.@Twitter Right n😉w! #WhistlePodu #Yellove #PlayBold #RCB pic.twitter.com/RaZdIRxqnq
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2021
'படையப்பா' படத்தில், சிவப்புப் புடவை கட்டி வரும் சௌந்தர்யா மீது, ரஜினிகாந்த் மஞ்சள் நீரை ஊற்றும் படத்தைப் பதிவிட்டு, ட்விட்டர் நிறுவனம் சிவப்பு நிற ஜெர்சி உடைய பெங்களூர் அணியை மஞ்சள் நிறத்திற்கு மாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளது. சி.எஸ்.கே அணியின் இந்தப் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.