Published on 25/04/2021 | Edited on 25/04/2021

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூருவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை அணி.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. சென்னை வீரர் ஜடேஜா ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூர் அணியில் தேவ்தத் 34 ரன்களையும், மேக்ஸ்வெல் 22 ரன்களையும், ஜேமிசன் 16 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் ஜடேஜா 62 ரன்களும், டு ப்லஸ்ஸிஸ் 50 ரன்களும், கெய்க்வாட் 33 ரன்களும், ரெய்னா 24 ரன்களும் எடுத்தனர்.