ஆஸ்திரேலியாவுக்கு எதிராண முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் டாஸில் வெற்றிபெற்ற இந்திய அணி பவுலிங் வீச தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடியது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவருக்கு 158 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர் குறைக்கப்பட்டு டக்வொர்க் லிவிஸ்படி இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களம் இறங்கிய ஷிகர் தாவாண் மட்டுமே நிலையாக விளையாடினார். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரோஹித், கோலி, ராஹுல் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இவர்களை அடுத்து வந்த ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடியாக 50 ரன்கள் குவித்தனர். வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் இருந்த்தும் கடைசி ஓவரில் பண்ட் அவுட்டாகியதால், வெற்றி ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இறுதியாக, ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா சார்பில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவாண் 42 பாந்துகளில் 76 ரன்களை குவித்திருந்தார்.