வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆப்கன் அணி சிறப்பாக விளையாடி வங்கதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் ஐபிஎல்லில் கலக்கிய ரஷீத் கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதையடுத்து ஜூன் ஐந்தாம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி டாஸை வெற்றிபெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான தமீமை தவிர வெறு எவறும் சிறப்பாக விளையாடாததால் 20 ஒவர் முடிவில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியிலும் ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசியதால் நான்கு ஒவர் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.