இந்தியா அதிரடி பந்துவீச்சு: ஆல் அவுட் ஆன இலங்கை!
இந்தியா இலங்கை எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்க்ஸில் இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இலங்கையில் உள்ள பள்ளிகேல் மைதானத்தில் வைத்து நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 487 ரன்களைக் குவித்திருந்தது.
பின்னர் களாமிறங்கிய இலங்கை அணி வெறும் 37.4 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் சார்பில் கேப்டன் சண்டிமால் 48 (87) ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.
அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்குவதற்கான நேரம் இருக்கும் நிலையில், இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்து இன்னிங்க்ஸ் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.