Published on 11/11/2020 | Edited on 11/11/2020

2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கிற ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-ஆவது ஐபிஎல் தொடர், கடந்த 2 மாதங்களாக அமீரகத்தில் நடைபெற்று வந்தது. கரோனா அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்கு இடையே நடைபெற்ற இத்தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கெடுத்தன. அடுத்து வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அணி குஜராத்தை சேர்ந்த அணியாக இருக்கும் என்றும், இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.