இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான பணிக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30ஆம் தேதியுடன் முடிந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இவற்றில் குறிப்பாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்தின் மெக் ஹெசன், இந்தியாவின் லால்சந்த் ராஜ்புட் மற்றும் ராபின் சிங் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ், பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.