நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்கு கண் பராமரிப்பு பற்றியும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றியும் தொடர்ச்சியான நமது கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ். விழித்திரை விலகல் பற்றி அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
ரெட்டினா என்கிற விழித்திரை கண்ணுக்குள் இருக்கிற ஒரு லேயர். அதன் வழியாகத்தான் ஒளியானது கண்ணுக்குள் சென்று அங்கிருந்து நரம்புகளுக்கு சென்று மூளைக்கு செல்கிறது அதன் வழியாகத்தான் நாம் அந்த ஒளியைப் பார்க்கிறோம். கண்ணுக்குள் பத்து வகையான லேயர் உள்ளது. அது சில சமயம் விலகல் தன்மை அடையும். கண்ணின் பவரானது மைனசில் இருப்பவர்களுக்கு விழித்திரையானது மெலிந்து இருக்கும். அதனால் விழித்திரையில் ஓட்டை ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்த லேயர்களெல்லாம் பிரிய வாய்ப்பு ஏற்படும்.
உடலில் இரத்த அழுத்தம் அதிகமானால் அது விழித்திரையை பாதிக்கும். கண்களுக்குள்ளேயே கேன்சர் கட்டிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் விழித்திரை பாதிக்கும். கண்ணில் அடிபட்டால் கண்ணில் விழித்திரை விலகும். கண்ணின் மையப்பகுதியில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பார்வை போய் விடும். அதைத் தவிர்க்க அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்ய முடியும். விழித்திரை விலகல் என்பது இவ்வகையான காரணங்களால் ஏற்படுவது தான்.