நிறமிகள் உள்ள தேநீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் நம்மிடம் விளக்குகிறார்.
தற்போது டீ வகைகளில் கிரீன், லெமன், மஞ்சள், வெள்ளை, பிளாக், உள்ளிட்ட பல டீக்களை விற்கத் தொடங்கிவிட்டனர். எப்போதுமே நிறமிகளில் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. நம்முடைய உடலில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து நிறங்களைச் சேர்க்க வேண்டும். சாலட் என்ற அறை வெப்பநிலையில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஃபிளாவனாய்டுகளை அதிகரிக்கச் செய்யும். அதில் வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, வெங்காயம், கேரட், கொத்தமல்லி போன்றவற்றை சாலட்டாக சாப்பிட்டால் நமக்கு ஐந்து நிறங்கள் கிடைத்துவிடும்.
இதுபோன்ற ஐந்து நிறமுள்ள உணவுகளைத் தினம் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலுள்ள நிறமிகள் நம் உடலிலுள்ள ஃபிளாவனாய்டுகள் அதிகரிக்கும். டீ, காபி, கருப்பட்டி காபி, சங்கு பூ போன்றவை ஒரு வகையில் நல்லதுதான். ஆனால் அதை மேஜிக்கல் டீ மாதிரி பார்க்காமல் அதுவும் உடலுக்குத் தேவை எனக் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். ஃபிளாவனாய்ஸ் இருக்கும் பூக்களின் டீக்களை நான் கொஞ்சம் பரிந்துரை செய்கிறேன். அது ஆன்டி ஏஜிங்க்கு உதவியாக இருக்கும். பசு மஞ்சளை மிளகில் வைத்தும் சாப்பிடலாம் அதுவும் நிறமிதான். பேலியோ டயட் குரூப் பெரும்பாலும் பூண்டு, மிளகு, மஞ்சள் போன்றவற்றை வைத்து மஞ்சள் பேஸ்ட்டாக சாப்பிடுவார்கள். இது உடலில் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியைக் கொடுக்கும்.
காலையில் குடிக்கும் டீ-யில் ஒரு ஸ்பூன் நெய்யை சிலர் சேர்ப்பார்கள். நெய்யில் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடலில் இருக்கும் குடல் தாவரங்களுக்கு நல்லது. ஒரு ஸ்பூன் நெய் எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்ற ரூல்ஸ் கிடையாது. டீ-யில் நெய் ஊற்றிக் குடிப்பது அவரவர்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கை அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தால் கொடுக்கட்டும். நெய் சாப்பிட்டால் சிலருக்கு டாய்லட் போகும். அது குடல் சுத்திகரிப்புக்கு உதவும். ஒரே ஒரு உணவினால் எந்த மேஜிக்கும் நடக்காது. திட்டமிட்ட சரிசமமான உணவு முறையைப் பின்பற்றினால் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.