Skip to main content

"எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்; பகலில் தூங்கலாமா?"- மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

"How long should you sleep; can you sleep during the day?"- Dr. Arunachalam explains!

 

'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான தண்ணீரை காலை 07.00 மணி முதல் காலை 07.30 மணிக்குள் இரண்டு லிட்டராவது குடித்தோம் என்றால் நமக்கு சூடு வராது. சூடு வருவதற்கு காரணம் சரியாக பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடாதது;  தண்ணீரை சரியாக குடிக்காததும் ஒரு காரணம். சர்க்கரை வியாதி வர வைக்கும் பழங்களை சாப்பிடு, சாப்பிடுன்னு சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். 

 

சர்க்கரை வியாதிக்கு பழங்களை சாப்பிடாதன்னு சொன்னால், நமக்கு தெரியாமல் இரண்டு பழங்களை சாப்பிடுவதும், எந்த பழங்களை சாப்பிடலாம் என்று அக்கறையுடன் கேட்பதும் பார்க்கிறோம். மனிதர்களைப் புரிந்துக் கொள்வது ரொம்ப சிரமம்.  தமிழர்களைப் புரிந்துக் கொள்வது மிக மிக கஷ்டமான விஷயம். 

 

எவ்வளவு சொன்னாலும், அவர்கள் அந்த புரிதலில் இருந்து மாறாமல்; உடலுக்கு எது வேண்டும்; வேண்டாம் என்பதை விஞ்ஞான ரீதியில் கூறினால் கூட, நான் இப்படித்தான் என்று அவர்கள் படுகிற கஷ்டத்தை அதிகப்படுத்திக்கறதப் பார்க்கும் போது தான், எப்படித்தான் இவர்களை கையாள்வது என்ற ஆதங்கம் தான் நமக்கு வெளிப்படும். 

 

பிறந்த குழந்தைகள் 24 மணி நேரமும் தூங்கினால் தான், அந்த குழந்தையின் எடை அதிகரிக்கும். பள்ளிக் குழந்தைகள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 5 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் 6 மணி நேரம் தூங்க வேண்டும். பகல் நேரம் தூங்குகிறவர்கள் உள்ளனர். பகலில் 1 மணி நேரம் தூங்குவது இரவில் 2 மணி நேரம் தூங்குவதற்கு சமம். வேலைக்கு ஷிஃப்ட்டுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தூங்குபவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். 

 

நாம் தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும். வாரத்தின் இறுதி நாட்களில் கூடுதலாக 5 மணி நேரம் தூங்க வேண்டும். எது போதுமான அளவு தூக்கம் என்றால், எழுந்திருக்கும் போதே ஒரு ஹாப்பினஸ் தெரியும். அந்த நேரம் வரும் வரை தூங்குவது நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.