மனநல மருத்துவர் ராதிகா முருகேசன், மன நலம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை நக்கீரன் நலம் வாயிலாக நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நட்பாக பழகி வருபவர்களிடையே காதல் இருப்பதை எப்படி கண்டறிவது? என்ற நமது கேள்விக்கு தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
நண்பர்களாக தொடங்கி காதலில் முடியும் பெரும்பாலான ஆண் மற்றும் பெண் பாலினத்திற்கிடையேனான அன்பை வெளிப்படுத்துவது 50 சதவீதம் உடலுறவில் தான் முடிவடைகிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். காதலா? நட்பா? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு உடலுறவு தேவை இரண்டாவதாக இருக்கும். இருவரும் சேர்ந்து பழகக்கூடிய நேரங்கள் மற்றும் மற்ற நடவடிக்கைகள் அங்கு முதன்மையானதாக இருக்கும். உடலுறவு இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை என்ற மனப்பக்குவம் அவர்களிடம் இருக்கும். காதலா? நட்பா? என்ற மெல்லிய கோட்டில் நின்று கொண்டிருப்பார்கள். சிலர் நட்பாக பழகியவர்களை திருமணம் செய்து அவர்களுடன் தொடர்ந்து வாழ்க்கையில் பயணிக்க முடிவெடுப்பார்கள்.
பொதுவாக ஆண்கள் காதல் என்று கூறி அடுத்தகட்டமான உடலுறவை முதன்மையானதாக வைத்திருப்பார்கள். பெண்களுக்கு அது முதன்மையானதாக இருக்காது. ஒரு ஆண் தனது விருப்பத்தை ஒரு பெண்ணிடம் கூறும்போது அந்த பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லையென்றால் அதை விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் இறுதியில் அது தொல்லை கொடுப்பதில் முடிந்து விடும். அந்த பெண்ணும் அவனுடன் இருக்கும் நட்பை முறித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுவாள். இந்த கான்செப்ட் வெறும் உடலுறவுக்கு மட்டுமில்லை. இதில் அந்த பெண்ணுக்கு அந்த ஆணை பிடிக்காமல் கூட இருக்கலாம். ஒருவேளை இதுபோன்ற நட்பை தொடர்ந்து வருபவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பொசசிவ்னெஸை வைத்து காதல் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். பெரும்பாலான நட்பு காதலில் முடிவடையும் என்ற ஃப்ளவர்ஸ் கான்செப்ட் தோல்வியில் தான் முடிவடைகிறது. அதற்குள் போகாமல் இருப்பதே பெட்டர்.
நட்பாக பழகி வரும் ஆண் மற்றும் பெண்கள் நட்பிலேயே இருங்கள். அதை உடலுறவு வரை எடுத்து செல்ல விரும்பினால் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆண்கள் ஒன் சைடு காதல் என்ற பெயரில் பெண்கள் மீது நிறைய அட்வான்டேஜ் எடுத்து வருகின்றனர். அதுபோல இல்லாமல் வெளிப்படையாக பேசுவதில்தான் உண்மை என்ன என்பதை கண்டறிய முடியும். பெண்களிடம் உண்மையாகவே நட்பாக ஆண்கள் பழகியிருந்தால் இதுபோல வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் இருக்கும். அதுதான் அந்த நட்பின் அடித்தளமே. வெளிப்படையாக எதிகாலத்தைப் பற்றி பேச அந்த நட்புக்குள் முதலில் கம்போர்ட் இருக்க வேண்டும். அப்படி பேசிய பின்னர் அந்த நட்பை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல முடியவில்லையென்றால் விலகி இருக்கலாம். இதில் எந்தவித தப்பில்லை என்றார்.