அல்சரை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும், அல்சரில் இருந்து எப்படி நம்மை தற்காத்து கொள்ள வேண்டும் ஆகியவற்றை குறித்து உணர்வு நீக்கியல் மருத்துவ நிபுணர் கல்பனா நமக்கு விளக்குகிறார்.
வருமுன் காப்போம் என்பதை பற்றி பேசுவோம். வாழ்க்கையில் எல்லா விஷயமும் வருவதற்கு முன்னாடி தயாராக இருந்தால் அதை காப்பாற்றிக்கொள்ளலாம். இன்றைக்கு நிறைய இளைஞர்களுக்கு அல்சர் வருகிறது. வயிறு எரிச்சல், வயிறு புண் வருவதை நமது உணவு பழக்கம் அதிகப்படுத்தும். இதனால், ரொம்ப ரொம்ப தாங்கமுடியாத வலி வரும். இதற்கு சரியான நேரத்தில் வேளை வேளைக்கு சாப்பிட வேண்டும்.
டியோடினல் அல்சர், காஸ்டிரிக் அல்சர் என இரண்டு வகையான அல்சர் இருக்கிறது. அல்சர் உள்ள ஒரு நபர், சாப்பிட உடன் வயிற்று வலி கம்மி ஆகிவிடும். ஆனால், இந்த டியோடினல் அல்சர் அதிகமாகி, நடு ராத்திரி பயங்கரமான வலியோடு எழுவோம். அந்த வலி 10/10 அளவுக்கு இருக்கும். இதை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். நமது உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம். நாம் சாப்பிடுற உணவு சீக்கிரம் செரிமானம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும். நமது வாழ்க்கை முறை மாற வேண்டும். இந்த அல்சர் வருவதற்கு முன்பு, வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தெரியவரும். சில சமயம் மாரடைப்பு வருவது போல் வலி ஏற்படும். இது வரும் போது தண்ணீர் குடித்தாலோ அல்லது தயிர் பருகினாலோ, பயோடிக் பானங்கள் குடித்தாலோ வலி கம்மி ஆகும்.
அதிகளவு மன அழுத்தம், காபி போன்ற பானங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை பயன்படுத்தினால் தான் இந்த அல்சர் வருகிறது. சில பேருக்கு கோதுமை சப்பாத்தி சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் வரும். நிறைய பேருக்கு இது அல்சராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரம்பக்கட்டத்திலேயே அல்சர் வராது. வயிற்று பகுதியில் சில இடங்களில் வீக்கம் இருக்கும், அது தான் வயிற்று எரிச்சலுக்கான காரணம். அந்த அசிட்டிட்டியை நடுநிலைப்படுத்தினால், வலி கம்மி ஆகிடும். அதற்கு தான் ஜெலுசில் போன்ற மருந்தை நாம் குடிப்போம்.
வலி எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அந்த வலியினால் நாம் பாதிப்படையுறோமா, இல்லையா என்பது நம் கையில் தான் இருக்கிறது. அதற்கான மருத்துவம் எடுத்துக்கலாம். அதை தடுப்பதற்கான யுக்திகளை கையாளுவதை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அல்சரை சரிசெய்யவில்லை என்றால், அது நாள் ஆக ஆக சிலசமயம் புற்று நோயாக மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு. அதனால், இது வருவதற்கு முன்னாடியே நாம் காப்பாற்றிக்கொள்வது நல்லது. இந்த அல்சரால், புளிச்ச ஏப்பம் போன்றவை வரும். ஒரு பொது இடத்தில் இந்த மாதிரி ஏப்பம் விட்டால், சங்கடமான நிலை ஏற்படும். இதனால், வெளியே செல்வதற்கே பயம் ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படும். இதற்கான வழி என்னவென்றால், நமது உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளம்லாம். நமக்கு ஒவ்வாத விஷயங்களை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வலி மாத்திரை சாப்பிடுகிறோம் என்றால் அதுவும் அல்சரில் கொண்டு சேர்க்கும். வலிக்கான மாத்திரைகளை நீங்களே முடிவு செய்து வெளியே வாங்கி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இது போன்ற அல்சர் இருக்கும் போது ஒரு மன உளைச்சலில் கொண்டு சேர்க்கும். மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றால், ஒழுங்குமுறையான உணவு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். உணவு என்பது மிக மிக முக்கியமான விடயம். அந்த உணவை எப்படி, எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதில் தான் இந்த அல்சரில் இருந்து நம்மை காப்பாற்றும். வலிக்குண்டான மாத்திரைகளை தயவுசெய்து சாப்பிட வேண்டாம். ஒரு வேளை அதை சாப்பிட்டால், உணவு உண்ட பிறகு இந்த மாத்திரைகளை சாப்பிடுங்கள். ஏனென்றால், இந்த மாத்திரைகள் வயிற்றை மட்டும் பாதிக்காது, சில நேரங்களில் சிறுநீரகத்தையும் பாதிக்கும்.