'சூப்பர் ப்ளூ பிளட் மூன்' என்றால் என்ன ? இந்த சூப்பர் ப்ளூ பிளட் எனும் மூன்று ஆங்கில வார்த்தையை பிரித்து மூனுடன்(நிலா) சேர்த்தால் சூப்பர் மூன், ப்ளூ மூன், பிளட் மூன் என வேறுபடுகிறது. இந்த மூன்று மூன் என்னவென்று தெரிந்து கொண்டோமானால் அதை வைத்து இந்த நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
சூப்பர் மூன்
நிலாவின் மையப்புள்ளிக்கும் பூமியின் மையப்புள்ளிக்கும் சராசரி நீளம் 3,82,900 கிமீ. இந்த இடைவெளியில் இருந்து குறைந்து நிலாவுக்கும் பூமிக்குமான மையப்புள்ளியின் இடைவெளி 3,60,000கிமீ ஆகும்போதுதான் அது "சூப்பர் மூனாக" மாறுகிறது. பூமியின் பக்கத்தில் நிலா வருவதால் நிலாவின் தோற்றம் பிரமாண்டமாக காட்சியளிக்கும். அதாவது பௌர்ணமி நிலவை விட இந்த சூப்பர் மூன் தோற்றம் 14% அதிகமாகவும், அதன் ஒளி 30% அதிகமாகவும் இருக்கும். இந்த நிகழ்வு வருடத்திற்கு நான்கு அல்லது ஆறு முறை நடக்கிறது.
ப்ளூ மூன்
ப்ளூ மூன் என்றவுடன் நிலா நீல நிறத்தில் மாறிவிடுமா என்று கேட்காதீர்கள். நிலா நீலமாகலாம் மாறாது. இந்த நிகழ்வு என்னவென்றால், நிலாவின் சுழற்சிமுறை 29.5 நாட்கள். அதாவது, அமாவாசையில் இருந்து பௌர்ணமியாக மாறும் வரை ஆகும் நாட்கள். வருடத்திற்கு 12 பௌர்ணமி வரும். சில வருடங்களில் இந்த நடைமுறையில் இருந்து வேறுபட்டு 13வது முறையாக பௌர்ணமி பிறக்கிறது. அப்போது ஏதேனும் ஒரு மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி வரும். அந்த இரண்டாவது பௌர்ணமியைதான் ப்ளூ மூன் என்கிறார்கள். இந்த "ப்ளூ மூன்" இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும்.
பிளட் மூன்
பிளட் மூன் என்ற சொல் அறிவியல் ரீதியாக ஆங்கிலத்தில் குறிப்பிடுவது அல்ல. சந்திர கிரகணம் நடக்கும்போது சந்திரன் தன் வெண்மை நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் மாறுகிறது. அதாவது சந்திர கிரகணத்தின் போது நிலா பூமியின் அம்பிரா வழியாக கடப்பதால் சூரிய ஒளி நிலவில் மூலம் மறைக்கப்படுகிறது. சூரியனின் ஒளியை நிலா உள்வாங்குவதால் தான் இந்த சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிற மாற்றம் ஏற்படும். அதனால்தான் பிளட் மூன் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது நடந்துவிடும்.
சூப்பர் ப்ளூ பிளட் மூன்
மேலே பேசப்பட்ட மூன்று நிகழ்வுகளையும் ஒன்று சேர்த்து பாருங்கள் அதுதான் " சூப்பர் ப்ளூ பிளட் மூன்".