Published on 13/08/2018 | Edited on 13/08/2018
திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டென்மார்க் வாழ் தமிழரான அன்பு அறிவெழில் எழுதிய இரங்கல் பா...

சென்று வா என்றுரைத்தால்
வென்று வரும் தொண்டர்கள் நாம்,
தலைவன் வகுத்த பாதையில்
தடம் மாறா நேர் வழியில்
தளபதியின் துணையாக
தகர்த்தெறிவோம் சூழ்ச்சிகளை.
நெஞ்சிற்கு நீதியுண்டு!
நினைவெல்லாம் நீயுண்டு.
பகுத்தறிவு பகலவரே !
முத்தமிழ் காவலரே !
ஓய்வறியாமல் உழைத்தவரே !
அண்ணனோடு இணைந்தவரே !
அறிவின் ஒளிகொடுப்பாய்
உதிக்கும் சூரியனாய் என்றென்றும்...
-அன்பு அறிவெழில் (டென்மார்க்)