Skip to main content

இன்றைய ராசி பலன்-19.06.2024

Published on 18/06/2024 | Edited on 19/06/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

19-06-2024, ஆனி 05, புதன்கிழமை, துவாதசி திதி காலை 07.28 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. விசாகம் நட்சத்திரம் மாலை 05.23 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். பிரதோஷ விரதம். Êசிவ வழிபாடு நல்லது. 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசி பலன் - 19.06.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.05 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.



kadagam

கடகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
.

5

சிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.
 

kannirasi

கன்னி

இன்று எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.
 

danush

தனுசு

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.



magaram

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

kumbam

கும்பம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மன உளைச்சலை கொடுக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு இன்று பகல் 11.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு பிறகு தொடங்குவது நல்லது.