Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 18.08.2018




  1. கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
 

18-08-2018, ஆவணி 02, சனிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.47 வரை பின்பு வளர்பிறை நவமி. விசாகம் நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.


இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

meshamமேஷம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.59 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.

reshabamரிஷபம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

 

3மிதுனம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

kadagamகடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.

5சிம்மம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

.

kannirasiகன்னி

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

thulamதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

viruchagamவிருச்சிகம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

danushதனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

magaramமகரம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

kumbamகும்பம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

meenamமீனம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். உங்கள் ராசிக்கு பகல் 10.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், சுபகாரியங்களையும் மதியம் வரை தவிர்ப்பது உத்தமம். மனக்குழப்பங்கள் குறையும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்