Skip to main content

தினசரி ராசிபலன்- 18.02.2021

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

மேஷம்
இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

reshabam

ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

3

மிதுனம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.

kadagam

கடகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

5

சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு வீண் கவலைகளும் குழப்பங்களும் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

thulam

துலாம்
இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும்.

viruchagam

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

danush

தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

magaram

மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

kumbam

கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

meenam

மீனம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.