Skip to main content

இன்றைய ராசிப்பலன் -17.02.2023

Published on 16/02/2023 | Edited on 17/02/2023

இன்றைய  பஞ்சாங்கம்

17-02-2023, மாசி 05, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.28 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
 

இன்றைய ராசிப்பலன் -  17.02.2023 

மிதுனம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.




kadagam

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.




5

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும்.



kannirasi

கன்னி

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.






thulam

துலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.


viruchagam

விருச்சிகம்

இன்று உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.



danush

தனுசு

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். 




magaram

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பொருளாதார நெருக்கடிகளால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.




kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.




meenam

மீனம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.