Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 03.04.2019

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001


இன்றைய  பஞ்சாங்கம்

03-04-2019, பங்குனி 20, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 10.56 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.24 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 03.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. 
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

mesham

மேஷம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

 

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். நினைத்த காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும்.

 

3

மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

kadagam

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணம் சம்மந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

kannirasi

கன்னி


இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

 

viruchagam

விருச்சிகம்


இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

danush

தனுசு

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

 

magaram

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். புது பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

 

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபங்கள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

meenam

மீனம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் சேமிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.