Skip to main content

தீராத கடன் தீர்க்கும் குபேர எந்திரக் கோலம்

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

kuberer

படத்திலுள்ளதுபோல், கட்டங்களை மரப்பலகை அல்லது வெள்ளித்தட்டில் வரைந்து எண்களை எழுதவேண்டும். கட்டத்தைக் குங்குமத்தாலும், எண்களை அரிசி மாவாலும் எழுதுவது சிறப்பு.

திருமகளைக் குறிக்கும்விதமாக எழுதப் பட்டுள்ள "ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். கட்டங்களிலுள்ள எண்களுக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவேண்டும்.

ஐந்துமுக இரட்டைக் குத்துவிளக்கேற்றி, வெற்றிலைப் பாக்கு, பழவகைகள், பால்பாயசம், கற்கண்டு படைக்கவேண்டும். கட்டத்தில் மகாலட்சுமி மற்றும் குபேரனை ஆவாகனம் செய்து, குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5.00 மணிமுதல் 8.00 மணிக்குள் குபேர காலத்தில் 108 முறை பாராயணம் செய்து, உதிரிப்பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரத்தை முறையாக- ஆத்மார்த்தமாகப் பாராயணம் செய்தால் கேட்டது கேட்டபடி கிடைக்கும். பிறகு, செல்வம் சேரவேண்டுமென மகாலட்சுமியையும் குபேரனையும் மனதார வேண்டிக்கொண்டு, மந்திரத்தைக்கூறி தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக்கொள்ளலாம்.

"ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம்

உனபதுமாம் தேவஸக

கீர்த்திஸ்ச மணினா ஸக:

ப்ராதுர் பூதேஸ்மி ||

ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்

வருத்திம் ததாதுமே |||

ஓம் குபேராய ஐஸ்வர்யாய

தனதான்யாதிபதயே

தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா.'


இந்த பூஜையை தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமை அல்லது ஒன்பது பௌர்ணமி செய்துவர தொழில் விருத்தி யடையும். தடைப்பட்ட பணவரவு அதிகரிக் கும். பூஜை முடிந்தபிறகு, கோலத்தை உடனே அழிக்காமல் மறுநாள் துடைத் தெடுக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் அன்று ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களைத் தருவது சுபப் பலன்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து பூஜைசெய்த நாணயங்களை பச்சைநிறத் துணியில் முடிந்து, வீட்டின் தென்மேற்கில் சேமித்து வைத்து வழிபட்டு வர லட்சுமி குபேர சம்பத்து கிடைக்கும்.

இந்த பூஜை செய்வதால் உங்கள் வீட்டில் நிச்சயம் பணத் தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும்.